ஹாலிவுட் பட வாய்ப்புக்காக சமந்தா நடத்திய போட்டோஷூட்: வைரலாகும் நிகழ்வு

தனது தோற்றத்தை முழுவதும் மாற்றி போட்டோஷூட் நடத்தியுள்ள சமந்தாவின் அடுத்த கட்டம் என்ன? என்ற விவரம் அறிவோம்..

மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு பின் சினிமாவை விட்டு விலகிய சமந்தா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்

தற்போது பாலிவுட்டில் செட்டிலாகி இருக்கும் சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. அண்மையில் ‘சிட்டாடல்’ வெப் தொடர் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

சமந்தா பாலிவுட்டை தொடர்ந்து, விரைவில் ஹாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், சமந்தாவின் நியூ லுக் போட்டோஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், என்ன ஆச்சு சமந்தா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது போட்டோ ஷூட்டில், சமந்தா தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளது வைரலாகி தெறிக்கிறது.

இந்தப் புதிய தோற்றம் சினிமாவுக்காக அல்ல, ஒரு பிரபல ஹாலிவுட் பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக இப்படி மாறியுள்ளார். ஹாலிவுட்டில் வாய்ப்புகளை பிடிப்பதற்காக இவ்வாறு போட்டோஷூட் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஸ்ருதிஹாசன், சோபிதா துலிபாலா ஆகியோர் படிப்படியாக ஹாலிவுட் நோக்கி நகர்ந்து வருவதால், சமந்தாவின் அடுத்த டார்கெட்டும் ஹாலிவுட்டாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.

actress samanthaactress shruti haasanPriyanka Chopraசமந்தாசோபிதா துலிபாலா