விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக கலக்கி வருபவர் அர்ஜூன். இவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். இந்த நிலையில் படப்பிடிப்பின் போது அவரது தந்தை பட்ட கஷ்டங்கள் பற்றி பேசி உள்ளார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று முதல்வன் இந்த படத்தின் போது ஏற்பட்ட சம்பவம் குறித்து ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். முதல்வன் படத்தில் வீட்டில் வில்லன் வெடிகுண்டு வைத்துவிடுவார் அந்த சீனில் அப்பா விபத்தில் சிக்கினார்.
அப்போது அவரின் கழுத்து எரிஞ்சு போச்சு அதை நினைக்கும் போது இப்பவும் கஷ்டமா இருக்கும் அப்பா எப்போதுமே எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதற்காக மெனக்கெடுவார் கடுமையாக உழைப்பார் என்று கூறியுள்ளார்
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.