ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா புதிய வெளியீட்டுத் தேதி!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ள நிலையில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘சிக்மா ஸ்டைல்’ மற்றும் ‘அய்யய்யோ அம்மாடி’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, இரு பாடல்களின் மாறுபட்ட இசை பாணி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

டீசர் மற்றும் பாடல்கள் வாயிலாக வெளியாகியுள்ள காட்சிகள், ‘சிக்மா’ படத்தின் வண்ணமயமான, பொழுதுபோக்கு நிறைந்த உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. படத்தின் மையக்கதை மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து படக்குழு தொடர்ந்து ரகசியம் காத்து வருகிறது.

படத்தின் பணிகள் திட்டமிட்ட காலக்கட்டத்திற்குள் நிறைவடைந்துள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது. இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சயின் தொழில்முறை அணுகுமுறை, தெளிவு மற்றும் பணிகளில் அவர் காட்டிய நுணுக்கத்தையும் தயாரிப்பு நிறுவனம் பாராட்டியுள்ளது.

படத்தின் விளம்பரப் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன. மேலும், ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமன் எஸ். இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பையும், பெஞ்சமின் எம். கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். ஹரிஹரசுதன் விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சிக்மா’, அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

jason sanjayJason Sanjay’s Sigma Gets a New Release DateSigmaSundeep Kishan