ஜெய்லர் 2 படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.நெல்சன் இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்ற நிலையில் ஏற்கனவே மோகன்லால்,பகத் பாஸில், பாலையா போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.