`கர’ படத்தில் புது தோற்றத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

‘கர’ படத்தில் அதிரடி மாற்றம் – முதிய விவசாயியாக மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய எம்.எஸ். பாஸ்கர்.

இந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கர’ திரைப்படத்தில், கடன் சுமையில் தவிக்கும் முதிய விவசாயியாக நடித்துள்ள நடிகர் எம்.எஸ். பாஸ்கர், தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

‘நடித்தார்’ என்று சொல்லுவதற்குப் பதிலாக, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்றே சொல்ல வேண்டிய நிலை. பொதுவாக சில படங்களில் எந்தக் கதாபாத்திரமாக நடித்தாலும் நடிகரின் முகமே ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், இந்தப் படத்தில் எம்.எஸ். பாஸ்கர் முற்றிலும் வேறுபட்டு, அந்த கதாபாத்திரமாகவே மாறி இருந்தார்.

அவர்தான் நடித்திருக்கிறார் என்பதை பலருக்கும் முதலில் அடையாளம் காண முடியவில்லை. நெருங்கிய நண்பர்களுக்குக் கூட அது எம்.எஸ். பாஸ்கர் என்பதை அறிய முடியாத அளவுக்கு அவர் தனது தோற்றத்தையும் நடிப்பையும் மாற்றியிருந்தார். சிலர் மட்டுமே அவரது குரலை வைத்து அவர் நடித்திருப்பதை ஊகித்துள்ளனர். அதிலும் கூட வயதான முதியவரின் தளர்ந்த குரல் பாணியில் பேசித் தனது நடிப்பை மேலும் நம்பிக்கையூட்டியுள்ளார்.

முகத்தையும் குரலையும் மாற்றி அந்தக் கதாபாத்திரமாகவே மாறிய எம்.எஸ். பாஸ்கரின் இந்த அர்ப்பணிப்பை, ஒரு பிரபல இயக்குநர் “அவர் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார்” என பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Actor M.S.BhaskarDhanushKaraஎம். எஸ் பாஸ்கர்கர