தனுஷின் அடுத்த கட்டம் என்ன?

கோலிவுட்டும் டோலிவுட்டும் இணைபிரியா உறவு தானே.! அவ்வகையில், தெலுங்கில் முன்னணி இயக்குநர்களாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘சார்’ மற்றும் சேகர் கமுல்லா இயக்கத்தில் ‘குபேரா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் தனுஷ். இந்த இரண்டு படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் ஈட்டிக் கொடுத்தது. இதனால் பல்வேறு தெலுங்கு இயக்குநர்கள் தனுஷை அணுகி கதைகள் கூறிவந்தார்கள்.

அதில் வேணு உடுகுலா கூறிய கதை, தனுஷுக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனே ஒ.கே சொல்லி இருக்கிறார். இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறது. தற்போதைய படங்களை முடித்துவிட்டு, வேணு உடுகுலா இயக்கவுள்ள படத்துக்கு தனுஷ் தேதிகள் ஒதுக்கவுள்ளார். ராணா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘விரடா பருவம்’ படத்தின் இயக்குநர் வேணு உடுகுலா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விக்னேஷ் ராஜா இயக்கி வரும் படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதனை முடித்துவிட்டு ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.

actor dhanush has signed a new film
actor dhanushidli kadai moviestoryகதைதனுஷ்