சிவராஜ்குமார்‌ உடன் இணைந்து நடிக்கும் அபிஷன் ஜீவிந்த்!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தயாரிப்பாளர் பாலமுருகன்.அ தலைமையில் தொடங்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் ‘டிராமா கம்பெனி’ தனது முதல் திரைப்படத்தை பிரம்மாண்டமாக அறிவித்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றியால் கவனம் பெற்ற நடிகரும் இயக்குநருமான அபிஷன் ஜீவிந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக ஷிவானி நாகாரம் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் கௌதம் சிவராமன் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். படத்தின் துவக்க விழா மற்றும் பூஜை சென்னை நகரில் திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் முன்னிலையில் பாரம்பரிய முறையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த், கலைப்புலி எஸ். தாணு, இயக்குநர் சி. பிரேம்குமார், நடிகர்கள் மணிகண்டன், கென் கருணாஸ், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், ‘ஹார்ட்பீட்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் கவனம் பெற்ற யோகலட்சுமி, கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழு:

இசை: லியோன் ஜேம்ஸ்
ஒளிப்பதிவு: பிரகதீஷ் பிரபு
படத்தொகுப்பு: சுரேஷ்
ஆடை வடிவமைப்பு: சுவாதி ராமகிருஷ்ணன்

படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய தயாரிப்பு நிறுவனம், புதிய இயக்குநர் மற்றும் வலுவான நட்சத்திரக் கூட்டணியால் இந்தப் படம் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Abishan JeevinthShiva Rajkumarஅபிஷன் ஜீவிந்த்சிவராஜ்குமார்