Browsing tag

Shiva Rajkumar

பெத்தி – திரைவிமர்சனம்

அடையாளமே இல்லாத ஒரு கிராமத்தின் கனவுகளையும், அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு இளைஞனின் விடாமுயற்சியையும் மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் விளையாட்டு நாடகத் திரைப்படம் தான் ‘பெத்தி’. இந்திய அரசின் பதிவுகளில்கூட இடம்பெறாத ஒரு பழங்குடியின கிராமத்தில் வாழும் மக்கள், தங்களுக்கான அடையாளம் மற்றும் அங்கீகாரத்தை பெற போராடி வருகிறார்கள். அந்த சமூகத்தைச் சேர்ந்த ராம் சரண், விளையாட்டு மூலமாக சாதித்தால் தனது மக்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கிறார். ஆனால் அவரது பாதையில் சதி, துரோகம், […]

சிவராஜ்குமார்‌ உடன் இணைந்து நடிக்கும் அபிஷன் ஜீவிந்த்!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தயாரிப்பாளர் பாலமுருகன்.அ தலைமையில் தொடங்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் ‘டிராமா கம்பெனி’ தனது முதல் திரைப்படத்தை பிரம்மாண்டமாக அறிவித்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றியால் கவனம் பெற்ற நடிகரும் இயக்குநருமான அபிஷன் ஜீவிந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக ஷிவானி நாகாரம் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் […]

“நான் பிறந்தது சென்னையில் தான்”- பெத்தி பட விழாவில் நடிகர் ராம்சரண் பேச்சு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட விளையாட்டு பின்னணித் திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ள இப்படம், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் வாழ்க்கைப் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு, உணர்வுகள், ஆக்‌ஷன் மற்றும் ஊக்கமூட்டும் தருணங்கள் கலந்த இந்தப் படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் […]

சாதனை படைத்து வரும் ராம்சரணின் ‘பெத்தி’ டிரைலர்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில், பல திறமைகள் கொண்ட விளையாட்டு வீரராக ராம் சரண் மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கிரிக்கெட், மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டு காட்சிகள் டிரெய்லரின் முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளன. ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு, […]

அப்பா – மகனாக சிவராஜ்குமார் & அபிஷன் ஜீவிந்த்: புதிய படத்தின் படப்பூஜை தொடங்கியது!

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் மற்றும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவராஜ்குமார் உடன் புதிய படம் ஒன்றில் இணையவுள்ளார். மீண்டும் திரையில் அபிஷன் ஜீவிந்த் தனது முதல் படமான ‘டூரிஸ்ட் பேமிலி’ மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் அபிஷன் ஜீவிந்த். அதைத் தொடர்ந்து ‘வித் லவ்’ படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். அவர் எப்போது மீண்டும் படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, […]

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ பட அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் விமர்சனரீதியாக மட்டுமின்றி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படம் 700 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது. படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ரஜினியுடன் பாலகிருஷ்ணா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்நிலையில், தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் சந்தானமும் இப்படத்தில் முக்கியமான ரோல் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் […]