ஜெய்லர் 2 திரை விமர்சனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், எஸ் ஜே சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுராஜ் வெஞ்ஞாரமூடு, சிறப்பு தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ரப் ஹரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “ஜெய்லர் 2”. 2023 ஆம் ஆண்டு வெளியான “ஜெயிலர் 1” திரைப்படத்தை தொடர்ந்து வெளியாகியிருக்கும் பாகம் 2.

ஓய்வு பெற்ற ஜெய்லர் “டைகர்” முத்துவேல் பாண்டியன் மற்றும் குழு முதல் பாகத்தில் சிலை கடத்தலில் ஈடுபட்டு வந்த வர்மன் (விநாயக்) செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி அவரையும் அழிப்பதாக கதை முடியும். இறப்பதற்கு முன் வர்மன் என்னை கொலை செய்தால் என்னை தேடி யார் யார் எங்கிருந்து வருவார்கள் என தெரியாது. உன்னை சும்மா விட மாட்டார்கள் என சவால் விட்டுவிட்டு இறந்து போவார். அங்கிருந்த இந்த இரண்டாவது பாகம் துவங்குகிறது. வர்மன் சொன்னது போலவே விதவிதமான பிரச்சனைகள் தேடி வருகிறது. மிகப்பெரும் எதிரிகள் ஜெயிலரையும் ஜெயிலர் குடும்பத்தையும் இடையூறு செய்கின்றனர். இதனை எப்படி ஜெய்லர் எதிர்கொண்டார் , முடிவு என்ன என்பது மீதி கதை.

50 வருடங்களாக ஒரு மனிதர் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார் என்றால் அது சும்மா இல்லை. அதற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டாக ஒன் மேன் ஆர்மியாக திரையில் ஆளுமை செய்கிறார் ரஜினிகாந்த். வெறும் ஸ்லோ மோஷன் நடையிலேயே திரையித்தி பிடிக்க வைக்கிறார். முதல் பாதி முழுக்க சுராஜ், யோகி பாபு, நமோ நாராயணா குழு காமெடி சரவெடையில் கதை முழுக்க கலகலப்பு செய்கிறார்கள். நமோ நாராயணா வரும் காட்சிகள் படு மாஸ். தொடர்ந்து இரண்டாம் பாதி முழுக்க மிதுன் சக்கரவர்த்தி, எஸ் ஜே சூர்யா, வித்யா பாலன் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். பிரேமில் வரும் ஒருவரையும் சும்மா நிற்க விடாமல் அத்தனை பேரிடமும் உழைப்பை வாங்கி இருக்கிறார் நெல்சன். இடையிடையே வந்து போகும் மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ரப் உள்ளிட்டோர் அவ்வப்போது மெய்சிலிர்க்க வைத்து விட்டு செல்கிறார்கள்.

- Advertisement -

ரஜினி படத்திலேயே இந்த படத்தில் தான் இறந்து குத்துப் பாடல்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படம் முழுக்க அனிருத் கச்சேரிதான். டைட்டில் துவங்கியதிலிருந்து தனது வெறியாட்டத்தை ஆரம்பிக்கிறார். அல்லே போலேலோ, பிந்தாஸ், புட்டாப்பு கேங், வேற மாறி என எந்தப்பாலும் சும்மா கடக்கவில்லை. அத்தனையும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து, ஜாலி பிளே லிஸ்ட் ரகமாக கடந்து செல்கிறது. பின்னணி இசையும் தரம்.

ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளுக்கு நடுவே கூட கலகலவென சிரிக்க வைக்கும் காமெடி வசனங்கள் வைக்க இயக்குனர் நெல்சன் ஒருவரால் மட்டுமே முடியும். முதல் பாதை முழுக்க ஒரு பக்கம் என்ன ஆகுமோ என்கிற பயம் என்றால் இன்னொரு புறம் அதை மறந்து சிரிக்க வைக்கும் நமோ நாராயணா கும்பல் ஒரு பக்கம் அவ்வளவு அழகாக பேலன்ஸ் செய்திருக்கிறார்.

படம் பல வண்ணங்களில் பயணிக்கிறது. நிறைய லோகேஷன்கள், நிறைய கேரக்டர்கள், நகரும் காட்சிகள் என நெல்சன் இழுத்த இழுவைக்கெல்லாம் ஈடு கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். எடிட்டர் நிர்மல் ஒவ்வொரு காட்சியையும் ரஜினிசமாக செதுக்கி, மாஸ் பேக்கேஜாக கொடுத்திருக்கிறார்.

“பிந்தாஸ்” பாடல் அதைச் சுற்றி நிகழும் காட்சிகள் சற்றே நீளம் போல தெரியலாம். மேலும் லாஜிக் கூட சில இடங்களில் கேள்விக்குறிதான். எனினும் ரஜினியின் ஆளுமை, நெல்சன் ஸ்பெஷல் காமெடிகளில் கடந்து செல்கிறது.

மொத்தத்தில் தமிழ் சினிமாவில் அதிக வசூல் திரைப்படங்களில் முதல் இடத்தில் இருக்கும் ஜெய்லர் படத்தை தொடர்ந்து வந்திருக்கும் இந்த இரண்டாம் பாகம் கடந்த பத்து வருடங்களில் வெளியான ரஜினி ஸ்பெஷல் திரைப்படங்களை பட்டியலிட்டால் நிச்சயம் “ஜெய்லர் 2” டாப் இடம் பிடிக்கும். குறிப்பாக ரஜினி கொண்டாடும் ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்க்க படத்தில் அத்தனை சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

60%

ஜெய்லர் 2 திரை விமர்சனம்

ரஜினி ரசிகர்களுக்கு மெகா விருந்து!

  • Rating
jailer 2Jailer 2 Movie Review TamilMirnaamohanlalRajinikanthramya krishnanS J SuryahShiva RajkumarSuraj VenjaramooduVidya BalanYogi Babu