மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்

ஐசரி கணேஷ், குஷ்பூ சுந்தர் சி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் கூட்டணி தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, ஊர்வசி, குஷ்பூ, சினேகா, ரெஜினா, துனியா விஜய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “மூக்குத்தி அம்மன் 2”.

கான்ஸ்டபிள் சத்யாவுக்கு (நயன்தாரா) தினமும் வரும் கெட்ட கனவுகள். அதில் வரும் ஒவ்வொரு அமானுஷ்ய கதாபாத்திரமும் சத்யாவை மைலாஞ்சிக்கு வா என கூப்பிடுகிறார்கள்.

ஏன்? எதற்கு?, என்னும் கேள்விகளுடன் யாரும் வர யோசிக்கும் மைலாஞ்சியில் இருக்கும் ஒரு மலை கிராமத்திற்கு வேலை மாற்றல் வாங்கிக் கொண்டு தன் அம்மாவுடன் வந்து சேர்கிறார் சத்யா. பிறகுதான் பல பிரச்சனைகள் தலைதூக்க துவங்குகின்றன. அதை எப்படி முறியடித்தார் இதில் நயன்தாரா எப்படி மூக்குத்தி அம்மனாக அவதாரம் எடுக்கிறார் என பல கேள்விகளுக்கு பதிலாக பரவசப்படுத்தும் இறுதி கிளைமாக்ஸ்.

படத்தில் நயன்தாரா தான் தூண். உடன் ரெஜினா அவரை பந்தாடும் கேரக்டர். இதைச் சுற்றி கதை என்கிறதால் முழு கதையும் இவர்கள் இருவர் மேல் தான் பயணிக்கிறது. பல இடங்களில் நயன்தாராவுக்காகவே சில மொமென்ட்களையும் உருவாக்கியிருக்கிறார் சுந்தர் சி. சிங்கத்தின் மேல் அமரும் தருணம் , சண்டை காட்சிகள் என அனைத்தும் நயன்தாரா ஸ்டைல். அம்மன், கான்ஸ்டபிள் என இரு கேரக்டரையும் வழக்கம்போலவே நன்றாக செய்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே மிகச் சில காட்சிகளில் நம்மை ஆச்சரியப் படுத்துகிறார்கள் குஷ்பூ, சினேகா. ரெஜினா – துனியா விஜய் போர்ஷன்கள் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தது ஏன் என்பது புரியவில்லை. ரெஜினா கிளாமர் பாம் ஆக படம் முழுக்க ஹாலிவுட் தர வில்லிகள், சூரியக்காரிகளை ஞாபகப் படுத்துகிறார். இருவரின் கெமிஸ்ட்ரி புதுமையாகவும் இருந்தது.

ஊர்வசி, யோகிபாபு, போர்ஷன்கள் சுந்தர் சி ஸ்பெஷல் காமெடி சரவெடி. ஊர்வசி நடிப்பு எப்போதும் போல் சபாஷ் ரகம்தான்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் அம்மன் பாடல் உள்ளிட்டவைகள் படத்திற்கு பிளஸ். மேலும் மாய மந்திர கிராபிக் காட்சிகளும் அருமை. அதற்கு ஏற்ப ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையும் கிளைமாக்ஸ் காட்சியை மிகப்பிரமாண்டமாக மாற்றி இருக்கிறது. நிச்சயம் பல தாய்க்குலங்கள் மெய் சிலிர்ப்பார்கள். எடிட்டர் ஃபென்னி ஆலிவர் திறமையால் படத்தின் விறுவிறுப்பு எங்கும் குறையவில்லை.

ஹீலிங் தமிழ் சினிமா என்ன பேசிக் கொண்டிருந்தாலும் இப்படியான கமர்சியல், அம்மன் படங்கள் வரும்போது தான் குடும்பங்களை திரையரங்கம் நோக்கி நகர்த்தும் . திரையரங்களின் தொழிலுக்கு நாடி இந்தப் படங்கள் தான்.

மொத்தத்தில் “மூக்குத்தி அம்மன் 2”, பக்திப் படங்களை ரசிக்கும் தாய்க்குலங்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்கள் நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம்.

60%

மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்

மாசான அம்மன் தாயி - ஸ்டைலான வில்லன் பேபி

  • Rating
Duniya VijayMaina NandiniMookuthi Amman 2Mookuthi Amman 2 Movie Review TamilnayantharaRegena CassandrraUrvashiYogi Babuமூக்குத்தி அம்மன் 2