படப்பிடிப்பில் எதிர்பாராது சம்பவம்: 120 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

படப்பிடிப்பு தளங்களில் எதிர்பாராத விபத்துகள் நிகழ்வதுண்டு. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதும் உண்டு. ஆனால், இதோ இந்த சம்பவம் மிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, ரன்வீர் சிங் நடித்துவரும் படம்,’துரந்தர்’. இதில், மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, சாரா அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். ஆதித்யா தர் இயக்கும், ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் நடந்து வருகிறது.

படப்பிடிப்பில் குழந்தைகள் உள்பட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு உண்ட பின், திடீரென, குழந்தைகள் உள்பட சுமார் 120 பேருக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் தலைவலி ஏற்பட்டு, அவர்கள் அருகிலுள்ள எஸ்என்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உணவு விஷமானதால் உடல் நலப்பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். பெரும்பாலானோர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்றவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிகழ்வு திரைவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

120 people including children admitted to hospital

 

accidentactor ranveer singhinvestigationமாதவன்ரன்வீர் சிங்