யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்: நடிகை பூனம் பாண்டே உறுதி
‘ஏன் திருமணம் வேண்டாம் என்கிறேன்’ என்பதற்கு பதிலளித்துள்ளார் பூனம். இது குறித்துப் பார்ப்போம்..
சர்ச்சையான நிகழ்வுகளை செய்து அதில் பிரபலம் தேடுவதில் நடிகை பூனம் பாண்டே அசராதவர். எப்படியோ, டாக் ஆப் த சிட்டியாக வரவேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.
ஒருமுறை தான் இறந்துவிட்டதாக தகவலைப் பரப்பி நாடகமாடியவர். பாலிவுட் தயாரிப்பாளர் சாம் பாம்பேயை திருமணம் செய்து கொண்டார் என கூறப்படுகிறது. ஆனால் அவர், ‘ சாம் பாம்பேவின் பெயரைக் குறிப்பிடாமல், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறுகிறார்.
அதாவது அவர் தெரிவிக்கையில், ‘நான் இதுவரை யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. வரும் காலங்களிலும் யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். ஆனால், ஒரு முறை லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அப்போதுதான் நான் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டேன். அது எனது மனதில் மிகப்பெரிய வலியையும் தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. நான் அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன்.
ஒருமுறை, நான் எனது வீட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்தேன். காவல்துறையினர் எனது வீட்டிற்குள் நுழைந்து சுயநினைவின்றி கிடந்த என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். காவல்துறையினரின் சீருடை, காவல் துறை அலுவலகம், மருத்துவமனை ஆகிவற்றை மீண்டும் நான் எதிர்கொள்ள நேரிடுமோ என்ற அச்சம் எனக்குள் இப்போதும் இருக்கிறது.
இதன் காரணமாக, நான் இன்னொரு உறவில் துணிந்து இறங்க முடியவில்லை. இது போன்ற விஷயங்களுக்கு நான் அதிக முக்கியத்தும் கொடுக்காமல், எனது சிறிய வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று நினைக்கிறேன்.
வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உங்கள் வாழ்க்கையையும் நேரத்தையும் விரயம் ஆக்குவதைக் காட்டிலும், அவற்றை விட்டு விட்டு விலகிச் சென்று நிம்மதியாக வாழ்வது தான் புத்திசாலித்தனம்’ என்று கூறியுள்ளார். பூனம் பாண்டேவின் இந்த தகவல், ரசிகர்களால் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.
