எனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும்: ஆர்த்தி..
ரவிமோகன் இன்று குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள தகவல் காண்போம்..
ரவிமோகன் தன்னுடைய நீண்ட நாள் தோழியான ஆர்த்தியை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆர்த்தியிடம் இருந்து பிரிவதாக ரவி அறிவிப்பு வெளியிட்டார். பெயரையும் மாற்றிக்கொண்டார்.
ஆர்த்தியை பிரிவதாக தெரிவித்த ரவி மோகன் விவகாரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இருதரப்பும் சமரசமாக செல்லும் வகையில், நீதிமன்றத்தில் கவுன்சிலிங் நடத்தியது. ஆயினும், விவாகரத்தில் ரவிமோகன் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் விமர்சித்து அறிக்கையை வெளியிட்டு வந்தனர். இச்சூழலில், இன்று தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்துடன் ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதேபோல், ஆர்த்தி தரப்பில் ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ‘தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இந்த மனுக்களுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு ஜூன் 12-ந்தேதிக்கு சென்னை 3-வது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
