திருமணத்துக்காக, மதம் மாறுகிறாரா கீர்த்தி சுரேஷ்?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் மேனன்- நடிகை மேனகா தம்பதியின் மகள் ஆவார்.
இவர் ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
குறிப்பாக, ‘மகாநடி’ என்ற சாவித்திரி பயோபிக் படத்தின் சிறந்த நடிப்பிற்காக கீர்த்திக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இயக்குனர் அட்லி தயாரிப்பில் வருண் தவானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் வெளியான ‘தெறி’ படத்தின் ரீமேக் ஆன இந்த படம் வருகின்ற கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.
கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது ஆண்டனி தட்டில் என்ற தன்னுடன் பயின்றவரை திருமணம் செய்ய இருக்கிறார்.
தொழிலதிபரான ஆண்டனி தட்டில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்காக கீர்த்தி மதம் மாற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் 15 வருடங்களாக தொடர்ந்த நட்பு காதலாக மலர்ந்து கல்யாணம் வரை வந்திருக்கிறது.
அதாவது, ஆண்டனி தட்டில் கேரளா- கொச்சியில் உள்ள கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்தபோது, உயர்கல்வி பள்ளியில் கீர்த்தி படித்துள்ளார். இந்த சூழலில் இருவரும் நண்பர்களாக பழகி, ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறி இருக்கின்றனர்’ என தகவல்கள் வருகின்றன.
தற்போது, இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் 12-ம் தேதி கோவாவில் நடக்க இருக்கிறது. பிறகு, சென்னையில் பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடத்த உள்ளனர்.
ஆக, கீர்த்தியின் 15 வருட காதல் கதை ஏதோ இப்ப தான் வெளியிடப்பட்டு இருக்கிறது. அது தெரியாமல், இணையவாசிகள் யாருடனோ இணைத்து, அணைத்து இசை பாடி விட்டனர்.