நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, தமிழில் அறிமுகம் ஆகிறார்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகம் ஆகிறார். இது பற்றிய விவரம் காண்போம்..
கடந்த ஆண்டில் ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர் நடித்திருந்த ‘தேவரா’ படம் பெரிய வசூலை பெற்றது. பாடல் காட்சிகளில் ஜான்வியின் ஆட்டம் சிறப்பு என ரசிகர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜான்விக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. தற்போது இந்தியில் பரம சுந்தரி படத்தில் ஜான்வி நடித்து வருகிறார். தெலுங்கில் ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகிறார்.
தமிழில், சிவகார்த்திகேயனுடன் ஜான்விகபூர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தயாரிப்பாளரும் ஜான்வியின் அப்பாவுமான போனி கபூர் மறுத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில் உருவாகி வரும் வெப் தொடரில் ஜான்வி இணைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் இந்த வெப் தொடரை தயாரிக்கவுள்ள நிலையில், இந்த வெப் தொடர் நெட்பிளிக்சில் வெளியாகவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது இதன் சூட்டிங் துவங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் இந்த வெப் தொடர் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெப் தொடர் பான் இந்தியா தொடராக உருவாகி வருவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.