அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிக்கும் ஆக்ஷன் திரைப்படம்
அட்லி இயக்கத்தில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்..
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் ரூ.1700 கோடி வரையில் வசூல் குவித்தது. படத்தில் அல்லு அர்ஜூனின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. சேலை கட்டி நடனம் ஆடுவதும், சண்டைக் காட்சியிலும், ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தது.
இந்நிலையில், இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் அட்லியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ பட வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் படம் உருவாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் எடுக்கப்படுகிறது.
அட்லியின் இந்தப் படம் ‘பான் இந்தியா’ படமாக ஆக்ஷன் கதையில் உருவாகிறது. பட்ஜெட் ரூ.400 கோடி என சொல்லப்படுகிறது.