பிரபல நடிகருக்கு 72 கோடி ரூபாய் சொத்தை எழுதி வைத்த ரசிகை
சினிமாவின் ஈர்ப்பு போல உலகில் ஏதொன்றும் இல்லைதான். ரீல் வேறு, ரியல் வேறு என்பதை உணர்வார்களோ.! ஆனாலும், இதோ இந்நிகழ்வை என்னவென்று சொல்வது..
அதாவது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சஞ்சய் தத்துக்கு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய போலீசார், உங்களின் தீவிர ரசிகையான நிஷா பாட்டில் இறந்துவிட்டார். அவர் தனது ரூ. 72 கோடி சொத்தை உங்கள் பெயரில் எழுதி வைத்துவிட்டார்’ என தெரிவித்துள்ளனர்.
நிஷா பாட்டில் வங்கிக்கும் கடிதம் எழுதி, தன் பெயரில் இருக்கும் பணத்தை எல்லாம் சஞ்சய் தத்தின் கணக்கிற்கு மாற்றி விடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். போலீசார் சொன்னதை கேட்ட சஞ்சய் தத் ஆச்சரியப்பட்டார். இருந்தாலும் ரூ. 72 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏற்க மறுத்துவிட்டார்.
‘இறந்தவர் யாரென்றே எனக்கு தெரியாது. அவரின் சொத்துகள் எனக்கு வேண்டாம்’ என போலீசாரிடம் கூறிவிட்டார் சஞ்சய் தத்.
ஒரு ரசிகை தனக்கு பிடித்த நடிகரின் பெயரில் ரூ.72 கோடி சொத்தை எழுதி வைத்திருக்கிறாரே. அப்படி என்றால் அவருக்கு சஞ்சய் தத் மீது எவ்வளவு பாசம் இருந்திருக்க வேண்டும். நமக்கு இப்படியொரு ரசிகை கிடைக்க மாட்டாரா? என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகிறார்கள்.
பாலிவுட் நடிகர் கோவிந்தா மீதான அதீத அன்பால், அமைச்சரின் மகள் அவர் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்ததும் நடந்திருக்கிறது. அமைச்சர் மகள் மீது சந்தேகம் வந்து கோவிந்தாவின் மனைவி விசாரித்தபோதே உண்மை தெரிய வந்தது.
அதன் பிறகு கோவிந்தாவின் வீட்டிற்கு சென்று மகளை அழைத்துச் சென்றிருக்கிறார் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.