வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்புவின் 50-வது படம் அப்டேட்ஸ்

Web Ads

சிம்புவின் 50-வது படம் குறித்து வெளியான தகவல்கள் காண்போம்..

தளபதி விஜய்யின் ‘கோட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை சிம்பு நடிப்பில் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ ரிலீசுக்கு பின்பாக யாரும் எதிர்பார்க்காத விதமாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார் சிம்பு. இதனால் ரசிகர்கள் இன்பதிர்சி அடைந்தனர். அவர்களுக்கு மேலும் ஆச்சரியம், அளிக்கும் விதமாக, சிம்புவின் 50-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான ‘மாநாடு’ பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி பேண்டஸி ஜானரில் படம் ஒன்றை இயக்குவதாக இருந்தது. பட்ஜெட் காரணமாக தொடர்ந்து இந்தப்படம் துவங்குவது தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இப்படத்தை சிம்புவே தயாரிக்கவும் முடிவு செய்தார். ஆனால், தற்போது மீண்டும் இப்படம் துவங்குவது தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, சிம்புவின் 50-வது படத்தை வெங்கட் பிரபு இயக்க வாய்ப்புள்ளதாக லேட்டஸ்ட்டாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை துவங்கி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்பில் முக்கியமான ரோலில் மாஸ் காட்டியிருந்தார் சிம்பு. இப்படத்தை தொடர்ந்து பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க துவங்கியுள்ளார் சிம்பு. இவர்கள் இருவரும் இணையும் படத்தின் பணிகளும் நடந்து வருகிறது. கேங்க்ஸ்டர் கதைக்களமாக உருவாகும் இப்படத்துக்காக, புதிய லுக்கிற்கு மாறியுள்ளார் சிம்பு. எத்துறையிலும் மாற்றம் தானே மாறாதது, பார்க்கலாம்.!