குழந்தைகளுக்கு சிந்திக்கும் திறனை கற்றுக்கொடுங்கள்.. இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு.!!

மாரி செல்வராஜ் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.இவரது இயக்கத்தில் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில்சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் மாரி செல்வராஜ் பேசி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. உங்களின் குழந்தைகளுக்கு சொத்து புகழ் சேர்த்து வைப்பீர்களோ இல்லையோ தெரியாது ஆனால் அவர்களுக்கு சிந்திக்கும் திறனை கற்றுக் கொடுங்கள் பெரிய பெரிய லெஜண்டோட பசங்க கிட்ட பணம் புகழலாம் இருக்கு ஆனால் சிந்திக்கும் திறன் இல்லை.
வாழ்க்கையில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறார்கள் பணம் மட்டுமே வாழ்க்கையில் முக்கியம் கிடையாது என்று பேசி உள்ளார் இவர் யாரை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் என்பது குறித்து உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

