‘லியோ’ வை முறியடித்த ‘குட் பேட் அக்லி’ வியூஸ்: வெயிட்டிங் ‘ஜனநாயகன்’
அவர்களுக்கு வியாபாரம், இவர்களுக்கு பொழுதுபோக்கு.! இப்ப விஷயத்திற்கு வருவோம்..
தளபதி படம் ரிலீஸானால், அதன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை தல படத்தோடு ஒப்பிடுவதும், தல படம் வெளியானால் அதன் சாதனைகளை தளபதி படத்தோடு ஒப்பிடுவதும், தொடர்கதை ஆகி வருகிறது.
அதேபோல், முன்னணி நடிகர்கள் நடித்த பட டிரெய்லர் ரிலீஸானால் அதில் யார் பட டிரெய்லர் அதிக வியூஸ் அள்ளுகிறது, லைக்ஸ் அள்ளுகிறது என்ற போட்டியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வகையில், அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தின் டிரெய்லர் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருந்ததால், அதை ரிப்பீட் மோடில் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’ டிரெய்லர் ரிலீஸான 24 மணிநேரத்தில் அதிக வியூஸ் அள்ளி சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வெளியான டிரெய்லர்களில் 24 மணிநேரத்தில் அதிக வியூஸ் அள்ளிய டிரெய்லராக விஜய்யின் ‘லியோ’ பட டிரெய்லர் இருந்தது.
‘லியோ’ பட டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் 31.4 மில்லியன் பேர் பார்த்திருந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த சாதனையை, தற்போது ‘குட் பேட் அக்லி’ டிரெய்லர் முறியடித்துள்ளது.
‘குட் பேட் அக்லி’ டிரெய்லர் ரிலீஸான 24 மணிநேரத்தில் 32 மில்லியன் வியூஸ் அள்ளி அதிகம் பேர் பார்த்த தமிழ்ப் பட டிரெய்லர் என்கிற சாதனையை படைத்துள்ளது. இந்தப் பட்டியலில் 29.28 மில்லியன் பார்வைகளுடன் ‘துணிவு’ பட டிரெய்லர் 3-வது இடத்தில் உள்ளது.
அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் பட டிரெய்லர் 29.08 மில்லியன் பார்வைகளுடன் 4-வது இடத்திலும், 29 மில்லியன் வியூஸ் உடன் ‘கோட்’பட டிரெய்லர் 5-வது இடத்திலும் உள்ளது. விரைவில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டிரெய்லர் இந்த சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ டிரெய்லரும் எதிர்பார்ப்பில் உள்ளது.