23 ஆண்டுகளுக்கு பிறகு, ஹரி சாருடன் இணைகிறேன்: பெர்த் டே விழாவில் பிரசாந்த் நெகிழ்ச்சி

பிரசாந்த் தனது 53-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு ஹரி-பிரசாந்த் கூட்டணி உருவாகியுள்ளது. இது குறித்த இனிப்பான அப்டேட் புசிப்போம்..

இன்றைய பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய பிரசாந்த், ‘தமிழ்’ படத்தின் மூலம் ஹரி சார் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதே பார்மெட்டில் இப்போதும் அவர் உறுதியுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 23 ஆண்டுக்கு பிறகு நானும் ஹரி சாரும் இணைந்து பணியாற்ற போகிறோம் என்பது பெரும் மகிழ்ச்சி.

இந்தப் படம் எல்லா ஜெனரேஷனுக்கும் பிடித்த படமா இருக்கும். நீங்கள் சொல்கின்ற 80ஸ், 90ஸ் 2கே கிட்ஸ்களையும் தாண்டி கொண்டாடுவார்கள். அந்த மாதிரியான கதையைத்தான் ஹரி சார் எழுதியிருக்கிறார். தியேட்டருக்கு வந்து நீங்க ‘பீல் குட்’ படம்னு சொல்ற மாதிரி இருக்கும்.

இந்த பிறந்த நாளில் எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் என் அப்பாவுக்கு மகனாக நான் பிறந்தது. இன்று வரை என் படங்களுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என் உயிரினும் மேலான ரசிகர்களால் நான் இந்த இடத்தில் நிற்கிறேன். இவர்கள் இன்று வரை எனக்கு சப்போர்ட் செய்வது ஆச்சர்யத்தை அளிக்கிறது’ எனவும் நெகிழ்ச்சியுடன் பிரசாந்த் கூறினார்.

இந்நிலையில், பெரிய பட்ஜெட்டில் பிரசாந்த் நடிக்கும் 55-வது படம் உருவாக இருப்பதால், பிரபலமான நடிகையை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அவ்வகையில், கயாடு லோஹர் கமிட் ஆகலாம் என கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய்க்கே ஜோடியானவர் ஆயிற்றே பிரசாந்த்.

announcement of prashant new film directed by hari