லோகேஷ் இயக்கும் இரும்புக்கை மாயாவி: சூர்யா இல்லன்னா அமீர்கான்
உருவாகவிருக்கும் ‘இரும்புக்கை மாயாவி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ், இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர்.
அமீர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஆகஸ்ட்.14-ல் படம் ரிலீஸாகிறது. இந்நிலையில், அமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
அமீர்கான் நடித்த ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற இந்திப் படம் வரும் 20-ந்தேதி வெளியாக இருக்கிறது. இதன் புரமோஷனில் கலந்துகொண்ட அமீர்கான் தெரிவிக்கையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்தார்.
‘லோகேஷ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ கதையாக இருக்கும். அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும்’ என்றார்.
லோகேஷ் கனகராஜ், ‘இரும்பு கை மாயாவி’ என்ற சூப்பர் ஹீரோ கதையை வைத்திருப்பதாகவும் அதில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் முன்பு தகவல்கள் வெளியாகி இருந்தன. ‘கங்குவா’ தந்த படிப்பினையால் லோகேஷ் கதையிலிருந்து விலகியதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.