தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்காக அஜித் செய்த விஷயம்..!

Web Ads

தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்காக அஜித் செய்த விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.

What Ajith did for those who work in his house

What Ajith did for those who work in his house

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் 64 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். கார் ரேஸில் பிஸியாக இருந்து வரும் அஜித் அவர்களது வீட்டு வேலை செய்பவர்களுக்காக செய்த விஷயம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது அவரது வீட்டில் டிரைவர், தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள் என மொத்தம் 12 பேருக்கு 1500 சதுர அடியில் தனித்தனியாக வரிசையாக வீடு கட்டி கொடுத்து இருப்பது மட்டுமில்லாமல் இந்த பகுதிக்கு அஜித் அவன்யூ என்றும் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த ப் பகுதி கேளம்பாக்கம் கண்டிகை பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

What Ajith did for those who work in his house

What Ajith did for those who work in his house