Web Ad 2

சிவகார்த்திகேயன் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

Web Ads

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஜாலியான படம். அந்த டைம் லூப் கான்செப்ட் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. படமும் ஹிட்.

அதைத்தொடர்ந்து, விஜய் நடிப்பில் GOAT படத்தை கொடுத்தார். இப்படம் சற்றுக் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக அமைந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு. பொதுவாகவே வெங்கட் பிரபுவும் எஸ்கேவும் ஜாலியான டைப். இவ்வகையில் எடுக்கப்போகும் படம் குறித்து வெங்கட் பிரபு தெரிவிக்கையில்,

‘இந்த படம் அவருக்கு வித்தியாசமான ரோலாகவும் இருக்கும். கதையை கேட்டு சிவகார்த்திகேயனும் தயாரிப்பாளரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். கலகலப்பான ஒரு படமாக இருக்கும். குறிப்பாக ரசிகர்கள் எதிர்பார்த்திடாத ஒரு படமாகவும் இருக்கும்’ என்றார்.

இச்சூழலில், அடுத்த மாதம் ஏ.ஆர். முருகதாஸ் -சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான ‘மதராஸி’ படம் வெளியாகின்றது. ‘அமரன்’ படத்தை தொடர்ந்து ‘மதராஸி’ படமும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இப்படம் துப்பாக்கியும் கத்தியும் கலந்த எமோஷனல் படம் என முருகதாஸ் குறிப்பிட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

venkat prabhu about sivakarthikeyan character in his next movie
venkat prabhu about sivakarthikeyan character in his next movie