தீவு ஒன்றில், பிகினி டிரெஸ்ஸில் பாடகி கெனிஷா: வைரலாகும் நிகழ்வு..

நடிகர் ரவிமோகனும் பாடகி கெனிஷாவும் இணைந்த நிகழ்வு தெரிந்ததே. இந்நிலையில் ‘அன்றும் இன்றும்’ என ஒரு சிங்கிள் பாடலை இசையமைத்து கெனிஷா பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை கொடுத்தது. இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் அவருக்கு எதிர்காலம் உண்டு எனவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, கெனிஷா குறித்து பேசிய ரவி, ‘அவர் எனது வாழ்க்கையின் ஒளி’ என தெரிவித்திருந்தார். மேலும், ரவியும் கெனிஷாவும் சேர்ந்து திரைத்துறையினருக்கு பார்ட்டியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் மாதவன், சுதா கொங்கரா, தெருக்குரல் அறிவு உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகின.
இந்நிலையில், தீவு ஒன்றில் கெனிஷா பிகினியில் கேஷுவலாக இருக்கும் வீடியோ ஒன்று வலைதளங்களில் தெறித்து வருகிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். முன்னதாக ரவியும் தன்னை சுற்றி பிரச்சினைகள் சுற்றிக் கொண்டிருந்தாலும் திரைப்பயணத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் வில்லன் ரோலை ஏற்றிருக்கும் அவர், ஜீனி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், பட விழாக்களிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
