சொர்க்கத்தில் இன்னொரு நாள், நாம் இருவரும்’ – அழகிய தீவிலிருந்து ஜோதிகா குஷி..
சூர்யா-ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளார்கள். தற்போது இந்த நட்சத்திர ஜோடி பிஸி வாழ்க்கையில் இருந்து சற்று விலகி ரிலாக்ஸாக விடுமுறையை அனுபவித்து வருகின்றனர்.
அதாவது, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள அழகிய தீவு நாடான சீஷெல்ஸில் ஓய்வெடுக்க சூர்யாவும், ஜோதிகாவும் சென்றுள்ளனர். அவர்களின் பயணத்தின் ஒரு அழகான வீடியோ ஆன்லைனில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த விடுமுறை அவர்களுக்கு ஓய்வெடுக்கவும், பரபரப்பான பிஸி வேலையில் இருந்து விடுபட சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களின் பயணத்தின்போது, சீஷெல்ஸின் கடற்கரைகள் மற்றும் அழகிய நிலப்பரப்புகளை சுற்றி பார்த்தனர். அவர்கள் அங்கு உள்ளூர் உணவு வகைகளை ருசித்து, இயற்கையின் அழகில் திளைத்து, தீவின் அமைதியான சூழ்நிலையை உண்மையிலேயே அனுபவித்தனர்.
ஜோதிகா, தங்களது மகிழ்ச்சியான அனுபவங்களின் காட்சிகளை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். இது வைரலானது. அவர்களின் விடுமுறையின் சிறப்பம்சங்களில் ஒன்று, ஹெலிகாப்டர் சவாரி செய்தது ஆகும். ஜோதிகா தனது வீடியோவை ‘சொர்க்கத்தில் இன்னொரு நாள், நாம் இருவரும்’ என்ற கேப்ஷனை பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.
