கமல்ஹாசனுக்கு, பவன் கல்யாண் வாழ்த்து..
‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, கமல்ஹாசன் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கல்கி படத்தின் 2-ம் பாகத்திற்கும் கமல்ஹாசனிடம் தேதிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கமல்ஹாசனை ஆஸ்கர் தேர்வுக் குழுவின் உறுப்பினராக தேர்வு செய்துள்ளது ஆஸ்கர் நிறுவனம். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகரும் ஆந்திரா மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் அவரது எக்ஸ் பக்கத்தில்,
‘2025-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் தேர்வுக் குழுவில் பத்மபூஷன் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ள விஷயம் என்பது, மொத்த இந்திய திரைப் படத்துறைக்கும் பெருமைக்குரிய விஷயம்.
கடந்த 60 ஆண்டுகளாக திரைத்துறையில் ஜொலித்து வரும் கமல்ஹாசன் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராக, கதை சொல்லியாக, நடிகராக உலக அரங்கில் இந்தியாவையும் இந்திய சினிமாவையும் பெருமைப்படுத்தி வருகிறார்.
பாடலாசிரியராக, இயக்குநராக , எழுத்தாளராக, தயாரிப்பாளராக என சினிமாவின் அனைத்துத் துறையிலும் அவரது திறமை பலருக்கும் பல வகைகளில் ஊக்கமளிக்கிறது. ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களிலும் இன்னும் பல தசாப்தங்கள் இந்திய திரைத்துறைக்கு கமல்ஹாசன் சேவையாற்ற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
