‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் நாளில், தெறிக்கவிட ரெடியாகும் தல யூனிஃபார்ம் அணி

Web Ads

அஜித் அணிந்த ஆடை வைரலாகி, தற்போது யூனிஃபார்ம் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கிறது. இது பற்றிய விவரம் காண்போம்..

‘தல’ அஜித் தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து திரிஷா, மீண்டும் ஜோடியாகி உள்ளார்.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளது. இப்படத்தில், மேஜிக் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசருக்கு பிறகு, பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தீனா, அமர்க்களம், மங்காத்தா வரிசையில் ‘குட் பேட் அக்லி’ படமும் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குட் பேட் அக்லி’ படத்தின் டீசரில் அஜித் பல தோற்றங்களில் வருகிறார். குறிப்பாக டீசரில் அஜித் ஒரு கலர்புல்லான சட்டை ஒன்றை அணிந்திருப்பார். அந்த கல்ரஃபுல்லான சட்டையின் விலை 1,80,000 ரூபாய் என கூறப்படுகிறது.

இதை கேள்விப்பட்ட தீவிர ரசிகர்கள், அதே வண்ணங்களில்-அதே மாடலில் எளிய முறையில் துணியை வாங்கி, டெய்லரிடம் கொடுத்து வருகின்றனர். அதனால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸாகும் தியேட்டர்களில் ‘தல யூனிஃபார்ம் குழுவை அணி அணியாய் காணலாம். ஆக, மறுடியும் பண்டிகைதான்.!

actor ajithkumar shirt in good bad ugly real price