‘லெஜண்ட்’ சரவணனின் லுக் வேற மாதிரி: வைரலாகிறது ஜார்ஜியா ஷூட்டிங் போட்டோஸ்..

Web Ads

‘லெஜண்ட்’ சரவணன் பகிர்ந்த தனது அடுத்த படத்தின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்..

மெகா தொழிலதிபரான ‘லெஜண்ட்’ சரவணன் தனது கடை விளம்பரத்துக்காக அவரே மாடலாக தன்னை உருமாற்றிக் கொண்டு தமன்னா, ஹன்சிகா என பல முன்னணி நடிகைகளுடன் ஆடினார்.

இதற்கு இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதும், அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து, இயக்குனர்கள் ஜெர்ரி-ஜெடி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஸ் இசையில் மிகப் பிரம்மாண்டமாக ‘தி லெஜண்ட்’ படத்தில் ஹீரோவாக நடித்து, பான் இந்திய திரைப்படமாக வெளியானது. இப்பட பிரமோஷன் நிகழ்ச்சியில், அந்தந்த ஊரில் அந்தந்த மொழியில் பேசி ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

தற்போது எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘லெஜண்ட்’ சரவணன் நடித்து வருகிறார். தூத்துக்குடியில் படப்பிடிப்பு தொடங்கி, விறுவிறுப்பாய் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் சாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். ‘லெஜண்ட்’ சரவணனுக்கு ஜோடியாக ‘இருவர் உள்ளம்’ படத்தின் மூலம் அறிமுகமான பாயல் ராஜ்புத் நடித்து வருகிறார்.

இப்படம், ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், லெஜண்ட் சரவணன் தனது வலைதளப் பக்கத்தில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில், முரட்டுத்தனமான லுக்குடன், கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு அட்டகாசமாக இருக்கிறார் லெஜண்ட். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘லெஜண்ட்’ சரவணன் லுக் வேற மாறி என கருத்துகளை பகிர்தல் வைரலாகி வருகிறது.