‘எந்த காதலும் சாஷாவின் காதல் போல் வராது: நாக சைதன்யா மீது சமந்தா அட்டாக்?
2-வது திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யா மீது, நடிகை சமந்தா கடும் கணை தொடுத்திருக்கிறாரா? என காண்போம்..
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடித்தார். அப்போது, ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் காதல் மலர்ந்து, திருமணமானது தெரிந்ததே. ஒரு கட்டத்தில் சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்பட்டாலும் இரண்டு பேரும் அமைதி காத்தார்கள்.
பின்னர், சமந்தாவின் தொடர் நடிப்பில் கடைசியாக ‘சிட்டாடல் ஹனி பன்னி’ வெப் சீரிஸ் வெளியானது. சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களால் பாராட்டு பெற்றன. படத்தில் சமந்தா, லிப் லாக் சீனிலும் நடித்திருந்தார். தனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு சமந்தாவுக்கு உற்சாகத்தில் ஆழ்த்தி, தற்போது உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.
இந்நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம், சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடந்தது.
இச்சூழலில், நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டது குறித்து, சமந்தா எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்தார். இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அதில், தனது நாய் சாஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘எந்தக் காதலும் சாஷாவின் காதல் போல் வராது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள், ‘இந்தப் பதிவில் மறைமுகமாக நாக சைதன்யாவை சமந்தா சீண்டியிருக்கிறாரோ?’ என கேட்டு வருகின்றனர். இதற்கு, சமந்தாவிடம் இருந்து விளக்கம் வருமோ?