‘தல’ ரசிகர்கள் தங்கள் ரிங்க்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது: ஜி.வி பிரகாஷ் வாய்ஸ்
அஜித்தின் ரசிகர்கள் தங்களது ரிங்க்டோனை மாற்றுகிற வேளை நெருங்கிவிட்டது என கூறியுள்ளார் ஜிவிபி. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
‘தல’ அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக், அஜித்தை வைத்து படமெடுக்கின்றார் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித்தின் மற்றொரு படமான ‘விடாமுயற்சி’ வெளியாக இருப்பதால், குட் பேட் அக்லி திரைப்படம், அஜித் பிறந்த நாளான மே-1 ஆம் தேதி ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கடைசி நேரத்தில் குட் பேட் அக்லி படத்திலிருந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டிருப்பதும் தாமதத்திற்கான காரணமாக கூறப்படுகிறது. இச்சூழலில், தேவிஸ்ரீ பிரசாத்திற்கு பதில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில் ஜி.வி பிரகாஷ் கூறுகையில், தற்போது ஒரு பெரிய ஸ்டாரின் படத்திற்கு இசையமைத்து வருகின்றேன். அதனை நான் வெளிப்படையாக தற்போது கூற முடியாது. தயாரிப்பு நிறுவனம் அறிவித்த பிறகு தான் பேச முடியும்.
இருந்தாலும், அந்த ஸ்டாரின் படங்களின் பின்னணி இசையிலேயே பெஸ்ட்டான பின்னணி இசையாக இது இருக்கும். அவர்களின் ரசிகர்கள் ரிங்க்டோனை மாற்றும் டைம் வந்துவிட்டது’ என மிகவும் நம்பிக்கையாக பேசியிருக்கிறார் ஜி.வி பிரகாஷ.
சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர், அமரன் ஆகிய படங்களுக்கு சிறப்பான இசையை வழங்கியிருந்தார் ஜி.வி பிரகாஷ். குறிப்பாக, பின்னணி இசையில் மிரட்டியிருந்தார்.
குறிப்பாக, 90 திரைப்படங்களுக்கு குறுகிய காலத்தில் தரமான இசை கோர்த்தவர் ஜிவிபி. தற்போது ‘தல’ படத்திற்கு சொல்லவா வேணும் ரசிகாஸ்.. செம செமன்னு தெறிக்கும்ல..!