அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படம்: இயக்குனர் யார் தெரியுமா?
புஷ்பா-2 படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து, அல்லு அர்ஜூனின் அடுத்த பட அப்டேட் குறித்து காண்போம்..
புஷ்பா-2 படம், ரிலீஸ் ஆன முதல் நான்கு நாட்களிலேயே பாக்ஸ் ஆபீஸில் ரூ.800 கோடி வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்டிவிடும் என்பதால், அல்லு அர்ஜுனின் முதலாவது 1000 கோடி வசூல் படமாக புஷ்பா-2 மாறவுள்ளது.
புஷ்பா-2 படத்தின் கிளைமாக்ஸில் புஷ்பா 3-ம் பாகத்திற்கான லீடு கொடுத்து முடித்திருப்பதால், அடுத்ததாக அல்லு அர்ஜுன் புஷ்பா-3 படத்தில் நடிக்கலாம் என பலரும் நினைத்திருக்கலாம். ஆனால், தற்போது இல்லை, சில வருட இடைவெளிக்கு பிறகு அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.
அதேபோல், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அதற்குள் சல்மான் கான் படத்தை இயக்க அட்லி சென்று விட்டதால், அந்தப் படமும் தற்போது டேக் ஆஃப் ஆக வாய்ப்பில்லை.
இதுதவிர, ‘அனிமல்’ பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் பெயரும் இந்த பட்டியலில் இருந்தது. இந்நிலையில், மலையாளத்தில் ‘ஜெய ஜெய ஹே’ என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் விபின் தாஸுடன் அல்லு அர்ஜுன் இணையவுள்ளார் எனவும் இப்படம், மலையாளம் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனையடுத்து இயக்குனர்கள் சுகுமார், அட்லி என வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.