ரூ.3000 கோடி வசூல் மழையில் ‘கலெக்ஷன் குயின்’ ராஷ்மிகா மந்தனா…

பாக்ஸ் ஆபீஸ் ஆரத்தி எடுக்கும் வகையில், ராசி மிகுந்த பந்தமாகி விட்டார் ராஷ்மிக மந்தனா. இது குறித்த விவரம் பார்ப்போம், வாங்க..
கன்னடத் திரையுலகில் பிறந்து ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அப்படத்தின் தயாரிப்பாளர் ரஷித் செட்டியுடன் காதல் ஏற்பட்டு, நிச்சயதார்த்தம் வரை சென்றார்.
பின்னர், பிற மொழிகளில் அடுத்தடுத்து வாய்ப்புகள் தொடர்ந்து வர.. முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற ராஷ்மிகா, திருமணத்தை அப்படியே நிறுத்தி, படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
முன்னதாக, 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு வருடங்களில் 3 படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
அதில் ஒன்று தமிழ் படம், மற்றொரு இந்தி படம், இன்னொன்று தெலுங்கு படம். இந்த 3 படங்களும் வசூலை வாரிக் குவித்துள்ளது.
அதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த ‘வாரிசு’ திரைப்படம் ரூ.310 கோடி வசூலித்தது. இதையடுத்து, இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா நடித்த ‘அனிமல்’ திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.917 கோடி வசூலித்தது.
அதேபோல், கடந்த ஆண்டு தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகளவில் ரூ.1800 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது.
ராஷ்மிகா கடைசியாக நடித்த 3 படங்களும் வசூல் மழை பொழிந்துள்ளதால், தற்போது அரை டஜன் படங்களுடன் பிஸியாக சிறகடித்து கண் சிமிட்டி வருகிறார்.
