இது போன்ற சம்பவம் இன்னும் நடக்கிறதா?: இயக்குனர் பாலாவிடம் நடிகை சங்கீதா கேட்ட கேள்வி..

Web Ads

‘வணங்கான்’ படம் பார்த்த சங்கீதா, இயக்குனர் பாலாவிடம் உரையாடிய நிகழ்வு குறித்து காண்போம்..

வாய் பேச முடியாத, கேது கேளாத கோட்டி (அருண் விஜய்). தனது தங்கை தேவி (ரிதா) உடன் கன்னியாகுமரியில் வசித்து வருகிறார்.

கிடைத்த வேலைகளை செய்து தங்கைக்காகவே வாழ்ந்து வருகிறார். அப்படி அவர் வேலை பார்க்க சென்ற ஆதரவற்றோர் இல்லத்தில், பார்வையற்ற பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வக்கிரத்தில் ஈடுபட்டவர்களை, கொடூரமாய் கொலை செய்து, போலீஸில் சரணடைகிறார்.

Web Ad 2

விசாரணையில், அவருக்கு தண்டனை கிடைத்ததா? அல்லது விடுதலை செய்யப்பட்டாரா? என்பதே இப்படம்.

இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த நடிகை சங்கீதா, ‘வணங்கான்’ படத்தை பார்த்த என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. இது போன்ற சம்பவம் இன்னும் நடக்கிறதா என்று பாலாவிடம் நான் கேட்டேன். இது உண்மையில் நடந்த ஒரு சம்பவம் தான் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. அழுது அழுது தலைவலி வந்தது தான் மிச்சம் என்று கண் கலங்கியபடி கூறியிருக்கிறார்.

முன்னதாக, பாலா இயக்கத்தில் வந்த ‘பிதாமகன்’ படத்தில் சங்கீதா நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

sangeetha krish share her feelings after watch vanangaan movie
sangeetha krish share her feelings after watch vanangaan movie