ஐஸ்வர்யா ராயிடம் எனக்கு பிடிக்காத விஷயம் ‘அதான்’: அபிஷேக்பச்சனின் அக்கா ஸ்வேதா ஃபீலிங்ஸ்..

Web Ads

முன்னாள் உலக அழகி ஜஸ்ஸிடம், ‘எனக்கு பிடிக்காத பழக்கம்’ உள்ளது என நாத்தனார் ஸ்வேதா கூறிய ‘செல்லச் சிணுங்கல்’ பற்றிப் பார்க்கலாம், வாங்க..

பாலிவுட் நடிகர் சல்மான்கானை காதலித்த ஐஸ்வர்யா, இருவரும் ஜோடிகளாக வலம் வந்து, திருமணம் செய்து செட்டில் ஆவார்கள் என பலரும் கணித்தனர். ஆனால், கணிப்பு பொய்யாகி இரண்டு பேரும் பிரிந்தார்கள்.

சல்மான்கானை பிரிந்த ஐஸ்வர்யா, பிறகு விவேக் ஓபராயை காதலித்தார். இவர்களும் காதல் ஜோடிகளாக வலம் வந்து பாதியில் முடிந்தது.

அதனையடுத்து, அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார்.

இதற்கிடையே அமிதாப்பச்சன் மற்றும் ஜெயாபச்சனால் அபிஷேக்பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் பிரச்சினை என்றும், பிறகு ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக்பச்சனின் அக்கா ஸ்வேதாவுக்கும் இடையே சண்டை என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்திகள் என தங்களது செயல்பாடுகள் மூலம் காண்பித்தார்கள்.

இந்நிலையில், அபிஷேக்பச்சனின் உடன் பிறந்த அக்காவான ஸ்வேதா, ஐஸ் குறித்து பேசுகையில், ‘ஐஸ்வர்யா ராய் உழைத்து முன்னேறியவர். ரொம்பவே பலமான பெண். அருமையான தாய். அது எனக்கு அவரிடம் பிடித்த விஷயம். ஆனால், பிடிக்காத விஷயங்களும் இருக்கின்றன.

அதாவது, அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாலோ இல்லை ஃபோன் செய்தாலோ அதற்கு உடனே ரெஸ்பான்ஸ் செய்யவே மாட்டார். அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான் மீண்டும் மெசேஜோ காலோ செய்வார்’ என்றார்.

abishek bachchan sister swetha talks about aishwarya rai
abishek bachchan sister swetha talks about aishwarya rai