கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கும் ‘சித்தா’ இயக்குநர் எஸ்.யு.அருண்குமார்

Web Ads

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ சமீபத்தில் நடைபெற்றது. அதன் காட்சிகள் இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே வேகமாகப் பரவி வருவதுடன், கமல்ஹாசனின் புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

வழக்கம்போல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, தனது தோற்றத்திலும் நடிப்பிலும் புதுமையை வெளிப்படுத்தி வரும் கமல்ஹாசனின் இந்த புதிய லுக், படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் உடன் கமல்ஹாசன் இணையும் முதல் திரைப்படம் என்பதால், இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென தனித்துவமான இயக்குநர் பாணியை உருவாக்கிய எஸ்.யு.அருண் குமார், கமல்ஹாசனை வைத்து உருவாக்கும் இப்படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Web Ad 2

படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை முழுமையாக வெளியாகாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் படத்தின் உலகம் குறித்த ஒரு சிறிய முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளன.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, எஸ்.யு.அருண் குமார் இயக்குகிறார்.

‘லுக் டெஸ்ட்’ பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.