ரஜினியின் ‘கூலி’ படமா? விஜய்யின் ‘ஜனநாயகனா?’: கோலிவுட் பரபரப்பு
தமிழ் சினிமாவில், முதல் சாதனை படைக்கவிருக்கும் படம் எது? என காண்போம்..
விஜய்யின் கடைசிப் படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ ஷீட் சில நாட்களில் நிறைவு பெறுகிறது. ஹெச்.வினோத் இயக்கி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொல்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.
இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ பட ரீமேக் அல்ல என படக்குழு உறுதி அளித்துள்ளது. அதே நேரம் இப்டம் அரசியல் எழுச்சியாக அமையும் எனவும் கூறப்படுகிறது. அவ்வகையில், பாடல்கள் முழங்கும் எனவும் எதிர்பார்கப்படுகிறது.
இந்நிலையில், அனிருத் ஒரு பாடலை ஜனநாயகன் கிளைமாக்ஸ் காட்சி முடிந்த பிறகு சேர்த்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த தகவல் உண்மையா எனவும் கேட்டு வருகின்றனர்.
தளபதி விஜய் பிறந்த நாளில், இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் தேதியுடனே வெளியாகி விட்டது. இப்படத்துடன் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரப்படி பார்த்தால் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என கூறப்படுகிறது. எனவே, ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு தனித்து வெளியாகும் என தெரிகிறது.
இச்சூழலில் விஜய்யின் ‘லியோ’ பட வெளிநாட்டு வியாபாரத்தை பொறுத்தவரையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கூலி’ படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு ‘ஜனநாயகன்’ பதிலடி கொடுக்கும் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
‘கூலி’ ரிலீஸ் தேதி ஆக்ஸ்ட் 14-ந்தேதி. ஜனநாயகன் ரிலீஸ் தேதியும் தெரிந்ததே. 5 மாத இடைவெளியில் வெளியாகும் இப்படங்களில், தமிழ் சினிமாவில் முதல் முதலாக யாருடைய படம் 1000 கோடி வசூல் சாதனை படைக்கப் போகிறது எனவும் திரை ஆர்வலர்களாலும் எதிர்நோக்கப்படுகிறது. பார்க்கலாம்..