Thala Vs Thalaivar

Viswasam BlockBuster : ரஜினியோட மோதி தல அஜித் ஜெயிச்சிட்டாரு, அவரும் ஒரு சூப்பர் ஸ்டார் தான் என விஸ்வாசம் பட தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

தல அஜித் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்திருந்தது.

இதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் திரைக்கு வந்திருந்தது. இந்த இரண்டு படங்களுமே தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் பேட்டையும் மோதியது குறித்து கேள்வி கேட்டனர்.

ரஜினியின் அடுத்தடுத்த 4 படங்களின் இயக்குனர்கள் – ரகசியமாக முடிந்த பேச்சு வார்த்தைகள்.!

அதற்கு முதலில் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்வதாக இருந்தோம். தயாரிப்பாளர்களின் ஸ்ட்ரைக்கால் படம் தள்ளி போனது.

அதனையடுத்து ஆகஸ்ட் மாதமே பொங்கல் ரிலீஸ் என அறிவித்து இருந்தோம். திடீரென சன் பிக்சர்ஸ் பேட்ட பொங்கல் ரிலீஸ் என கூறியது ஷாக்காக இருந்தது.

அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தோம். ஆனால், அவர்கள் பொங்கல் திருமுறை என்பதால் ரிலீஸ் தேதியை மாற்ற முடியாது என கூறி விட்டனர்.

ரஜினியை வைத்து 6 படம் தயாரித்து விட்டதால் இந்த மோதல் கொஞ்சம் தர்மசங்கடமாக தான் இருந்தது. ஆனால் தற்போது ரஜினியுடன் மோதி அஜித் ஜெயித்து விட்டார்.

பேட்ட Vs விஸ்வாசம் – முதல் நாள் சென்னை வசூல்.!

படத்திற்க்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்து வருகிறது. இதனால் அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.