Super Star Rajinikanth

Rajini Next : ரஜினியின் அடுத்த 4 படங்களின் இயக்குனர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள அரசியல் படத்தில் நடிக்க உள்ளார்.

அதன் பின்னர் ரஜினிகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற விவரங்கள் கிடைத்துள்ளன.

முருகதாஸ் படத்திற்கு பிறகு கே.எஸ். ரவிக்குமார் அல்லது பாஷா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இறுதியாக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளாராம். இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வடிவேலுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

அப்போது நடிகர் சங்கத்தில் உங்கள் மீதுள்ள பிரச்னையை தீர்த்து விட்டு வாருங்கள் நாம் இணைந்து படம் பண்ணுவோம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.