Pushpa 2

தனுஷ் நடிக்க மறுத்த கதையில் விஷ்ணு விஷால் நடிக்கிறார்?: கோலிவுட் பரபரப்பு

நடிகரும் இயக்குனருமான தனுஷ் நடிக்க மறுத்த கதையில், தற்போது விஷ்ணு நடிக்கவிருக்கிறாரா? இது குறித்து கோலிவுட் தகவல் என்ன என காண்போம்..

தனுஷின் திரைத்தொடர் ஓட்டத்தில் பல படங்கள் அவருக்கு கைவசம் உள்ளன. இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், ‘போர் தொழில்’ பட இயக்குனருடன் ஒரு படம் என செம பிஸியான ஷெட்யூலில் ஓடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தனுஷ் தன் லைன் அப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும், பிரபல ஹிட் இயக்குனரை தனுஷ் நிராகரித்ததாகவும் தகவல் வந்துள்ளது.

அதாவது, அஜித்தின் நடிப்பில் வெளியான ‘ஆழ்வார்’ படத்தை இயக்கியவர் தான் செல்லா அய்யாவு. அப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்லா அய்யாவு அதன் பிறகு, இயக்குனர் எழிலின் படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதி வந்தார்.

பின்பு, விஷ்ணு விஷாலை வைத்து ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ மற்றும் கட்டா குஸ்தி ஆகிய படங்களை இயக்கினார். இதில் கட்டா குஸ்தி திரைப்படம் வெற்றியை பெற்றது.

இதனைத்தொடர்ந்து, செல்லா அய்யாவு இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்தன. கட்டா குஸ்தி படம் பிடித்துப்போய் தனுஷ், செல்லா அய்யாவுவிடம் ஒரு கதை கேட்டுள்ளார்.

செல்லா அய்யாவு சொன்ன கதை தனுஷிற்கு பிடித்திருந்தாலும் அதில் பல திருத்தங்களை தனுஷ் கூறினாராம். செல்லா அய்யாவு பலமுறை கதையில் திருத்தங்கள் செய்தாலும், தனுஷிற்கு உடன்பாடு வரவில்லை என கூறப்படுகிறது.

இறுதியில் தனுஷ் மற்றும் செல்லா அய்யாவு இணைவதாக இருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. தனுஷ் மற்றும் செல்லா அய்யாவு இணைவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், செல்லா அய்யாவு தற்போது மீண்டும் விஷ்ணு விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரம் குறிப்பிடுகிறது. அதனாலென்ன.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகும்.