நந்தினியுடன் சேர்ந்து சமைக்கும் சூர்யா, கொளுத்தி போட்ட புஷ்பா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினி உடன் அங்கு வர இதுதான் அந்த வேலைக்கார மருமகளா என்று பேசிக்கொள்கின்றனர். அர்ச்சனாவை பார்த்தவுடன் சூர்யா கூலிங் கிளாஸ் கழட்டி நந்தினிக்கு மாட்டி விடுகிறார். இதையெல்லாம் பார்த்து சுந்தரவல்லி கடுப்பாகி அங்கிருந்து சென்று விடுகிறார். அருணாச்சலம் பின்னாடியே வந்து சுந்தரவல்லியை சமாதானப்படுத்த, அந்த மினிஸ்டர் வைஃப் எப்படி எல்லாம் பேசினாங்க பார்த்தீங்களா என்று சொல்லி அந்த வார்த்தை எல்லாம் கேட்டு நான் கூனி குறுகி நிக்கணுமா என்று சொல்ல அவங்க பாதிக்கப்பட்டவங்க பேசதான் செய்வாங்க விடு என்று சொல்லுகிறார்.
பிறகு அவன் எதுக்கு இங்க வந்தான் அவளோட என்று சொல்ல நான் தான் வர சொன்னேன் என்று சொல்லுகிறார். அப்ப மொத்த பேரும் என்ன அசிங்கப்படுத்த தான் இப்படி பண்ணுவீங்களா என்று சொல்ல மினிஸ்டர் குடும்பம் இங்க வருவாங்க எனக்கு தெரியாது என்று சொல்கிறார். அவங்க இருக்கிற இடத்துல என்னால இருக்க முடியாது என்று சொல்ல இங்கிருந்து போறதுதான் அசிங்கமா இருக்கும் நீ கொஞ்ச நேரம் வந்து இருந்துட்டு போயிடலாம் வா என்று சமாதானப்படுத்தி கூட்டி வருகிறார். அர்ச்சனா முறைத்து பார்க்க வயிறு எரியுதா இரு இன்னொரு டென்ஷன் பண்ற என்று சொல்லி அனைவரிடமும் இவதான் என் வைஃப் எப்படி இருக்கா செம்மையா இருக்கா என்று சொல்லி வெறுப்பேற்ற அனைவரும் சூப்பரா இருக்கீங்க செம ஜோடி என்று சொல்லுகின்றனர்.
ஐயர் பூஜையெல்லாம் முடிந்தது குத்து விளக்கு ஏற்ற கூப்பிடுங்க என்று சொல்லுகிறார். வீட்டு உரிமையாளர் அர்ச்சனாவை கூப்பிட மாதவி இவ்வளவு செலவு பண்ணி ப்ராஜெக்ட் பண்றீங்க நல்ல ஆளை கூப்பிட மாட்டீங்களா கைராசியா இருக்குறவங்கள கூப்பிடனும், என்று சொல்ல மணமேடை வரை போயி கல்யாணம் நின்னவங்களை போய் விளக்கேத்த கூப்ட்டா சரியா இருக்குமா? இந்த மாதிரி ராசி இல்லாதவங்களை கூப்பிட்டா எப்படி என்று சொல்லுகிறார்.
உடனே அர்ச்சனாவின் அம்மா மாதிவியிடம் சண்டைக்கு வருகிறார். நான் கண்டிச்சுகிட்டு தானே இருக்கேன் என்று அருணாச்சலம் சொல்ல ஆமா ரொம்ப நல்லா கண்டிச்சிங்க என்று சொல்ல , சுரேகா எங்க அப்பாவ பேசுற வேலை வெச்சுக்காதிங்க சொல்லுகிறார். பிறகு மினிஸ்டர் அனைவரையும் சமாதானப்படுத்த உரிமையாளர் மீண்டும் அர்ச்சனாவை விளக்கேற்ற கூப்பிட அவர் மறுக்கிறார். பிறகு சுந்தரவல்லியை கூப்பிடுகின்றனர் ஆனால் சூர்யா அதெல்லாம் ஓல்ட் ஃபேஷன் ஆன்ட்டி தி கிரேட் சுந்தரவல்லி யோட க்யூட் மருமகள் இருக்காங்க இவங்க ஏத்துவாங்க என்று சூர்யா நந்தினியை கொஞ்சி அழைத்து வருகிறார். இதையெல்லாம் பார்த்து சுந்தரவள்ளியும் அர்ச்சனாவும் கடுப்பாகுகின்றனர். பிறகு நந்தினியுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார். இதை ஸ்டேட்டஸ்ல வச்சா தான் நம்மளோட ஸ்டேட்டஸ் இந்த ஊர் உலகத்துக்கு தெரியும் என்று சொல்லுகிறார்.
இவ எப்படி அக்கா இங்க வந்தா என்று மாதவியிடம் சுரேகா சொல்ல, வேற யாரு சூர்யா தான் கூட்டிட்டு வந்திருப்பான் என்று சொல்லுகிறார் மாதவி. ஆனா நந்தினி இப்படியெல்லாம் கூட்டிட்டு வந்தா அவ மனசுல பெரிய வீட்டு மருமகள் நினைப்பு வந்துவிடாத என்று சொல்ல, அவ எப்பவுமே அது மாதிரி யோசிக்க மாட்டா. ஒன்னே ஒன்னு தான் சூர்யாவுக்கும் நந்தினிக்கும் லவ் மட்டும் வரக்கூடாது. அது மட்டும் இல்லாம நந்தினி நம்ம பேச்சை கேட்கிற ஒரு வேலைக்காரியா மட்டும் தான் இருக்கணும் என்று சொல்ல சுரேகாவும் அசோகனும் சரியென சொல்லுகின்றனர். மினிஸ்டர் மனைவி மினிஸ்டர் இடம் இந்த மாதிரி குடும்பத்துல அசிங்கப்பட்டதே இல்ல நம்ப என்று சொல்ல அதை விடும்மா என்ன பார்த்த உடனே சூர்யா அவளை எப்படி கொஞ்சலாம் பாத்தியா என்று சொல்லி டென்ஷன் ஆகிறார். நீ டென்ஷன் ஆகாதம்மா என்று அர்ச்சனாவிடம் சொல்ல இந்த குடும்பத்தை ஏதாவது செய்யணும் என்று மினிஸ்டர் மனைவி சொல்ல உடனே மினிஸ்டர் செய்யணும் கண்டிப்பா செய்றன் என்று சொல்லுகிறார்.
அந்த நேரம் பார்த்து நந்தினி வந்து எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க முக்கியமா அர்ச்சனாமா என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்லுகிறார். நீங்க என் மேல கோவமா தான் இருப்பீங்க ஆனா எனக்கும் இந்த கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உங்க வாழ்க்கை பாதிக்க நானும் ஒரு காரணமாயிட்டேன். அர்ச்சனா என் கண்ணு முன்னாடி நிக்காத போயிடு என்று சொல்லியும் நந்தினி விடாமல் பேசிக் கொண்டிருக்க ஒரு கட்டத்திற்கு மேல் அர்ச்சனா கை ஓங்கி வர சூர்யா தடுத்து நிறுத்துகிறார். யார் மேல கை ஓங்கற இவன் என் பொண்டாட்டி நந்தினி என்று சொல்லுகிறார். நீ எதுக்கு இவங்க கிட்ட பேசிகிட்டு இருக்க என்று சொல்ல பின்ன என்ன சார் பண்றது அவங்க கூட வாழனும்னு இவ்ளோ ஆசையா இருந்திருப்பாங்க ஆனா கடைசி நிமிஷத்துல நீங்க என் கழுத்துல தாலி கட்டின போகும் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க என்று சொல்ல, அதெல்லாம் பாவம் பாக்குறவங்களுக்கு சொல்லலாம் இவங்களுக்கு சொல்லக்கூடாது என்று சொல்ல உடனே அர்ச்சனா நீ எனக்கு பண்ணது பச்சை துரோகம் என்று சூர்யாவிடம் சொல்லுகிறார்.
கல்யாணத்துக்கு முன்னாடி வெளியே போய் சுத்தணும் கிப்ட் கொடுத்தோம் என்னோட பர்த்டே உன்கூட மட்டும் செலிப்ரேட் பண்ணனும்னு சொல்லி எல்லாம் பண்ணிட்டு இப்படி ஏமாத்திட்ட கடைசியில என்று சொல்லுகிறார். பிறகு நோ என்று சூர்யா சொல்ல இதையெல்லாம் பொய்னு சொல்ல போறியா என்று சொல்ல பாதி உண்மை பாதி பொய் என்று புதிய சொல்லுகிறார். உன்கூட வந்தேனே தவிர நான் விருப்பப்பட்டு எதுவும் செய்யல, உடனே அர்ச்சனா இதெல்லாம் புடிக்கலனா நீ முதல்ல புடிக்கலைன்னு சொல்லி இருக்கணும் என்று சொல்ல இப்பதான் பாயிண்ட்டுக்கு வர என்று சொல்லி, எத்தனை தடவை உன்கிட்ட சொன்ன என்ன கல்யாணம் பண்ணிக்காதீங்க உங்க லைப் நல்லா இருக்காது என்று எத்தனை தடவை சொன்ன கேட்டீங்களா உங்கிட்ட மட்டும் சொன்னா உங்க அப்பா கிட்ட எல்லாம் சொன்னேன் நீங்களா ஒரு முடிவு எடுத்துட்டு அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று கேட்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் சூர்யா சார் தான் கட்டாயப்படுத்தி கூப்பிட்டார் என்று சொல்ல, மாதவி அவன் கூப்பிட்ட ஜோடியா வந்து இறங்குவியா என்று கேட்கிறார்.
பிறகு நந்தினி உடன் சூர்யா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க புஷ்பா சுந்தரவல்லி இடம் அந்த நந்தினி சின்னையாவ சமைக்க சொல்லிக்கிட்டு இருக்கார் என்று சொல்ல சுந்தரவல்லி கோபமாக வெளியே வருகிறார். என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.