திருமணத்துக்குப் பிறகு தன்ஷிகா நடிப்பாரா?: விஷால் விளக்கம்..

‘கடவுள் எப்போதுமே சிறந்ததை கடைசியில் தான் தருவார்’ என தெரிவித்துள்ளார் விஷால். இது குறித்த தகவல்கள் காண்போம்..

‘யோகிடா’ திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஷால் தெரிவிக்கையில், ‘இங்கு தன்ஷிகாவின் தந்தை இருக்கிறார். அவரது அனுமதியோடு சொல்கிறேன். நான் தன்ஷிகாவை காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன்.

அவரை, நான் நன்றாகவே பார்த்துக்கொள்வேன். வெளியில் சொல்ல வேண்டாமென்றுதான் நினைத்தோம். ஆனால், வேறு வழியில்லாமல் இப்போது சொல்லிவிட்டேன். ஆகஸ்ட் 29-ந்தேதி எனது பிறந்த நாள். அன்றைய நாளில் நாங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம்.

அவர் ஓர் அற்புதமான பெண். கண்டிப்பாக சினிமாவில் வடிவேலு – கோவை சரளா போன்று சண்டை போடும் ஜோடியாக நாங்கள் இருக்கமாட்டோம். காரணம், அந்த சண்டை காட்சிகளை பார்க்கும்போது நான் கொஞ்சம் சூதானமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், எங்களுக்குள் சண்டை வராது.

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறோம். நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்று தான் சொல்வேன். கடவுள் எப்போதுமே சிறந்ததை கடைசியில் தான் தருவார். நாங்கள் இருவரும் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுக்க உள்ளோம்.

திருமணத்துக்குப் பிறகு தன்ஷிகா நடிப்பாரா என்று கேட்டிருந்தீர்கள். அவர் சத்தியமாக நடிப்பார். அதற்கு எந்த ஒரு தடையும் நான் போட மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

vishal says he wont ban dhanshika to act in cinema after marriage
vishal says he wont ban dhanshika to act in cinema after marriage