காயங்களை பாடங்களாக ஏற்றுக்கொள்கிறேன்: கெனிஷா பதிவு..
ரவிமோகன், கெனிஷாவின் கரம் பற்றியது தெரிந்ததே. இச்சூழலில் கெனிஷா வெளியிட்டுள்ள சூசக பதிவு காண்போம்..
ரவிமோகன், கெனிஷாவுடன் திருமண விழாவில் கலந்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிவதாக ரவிமோகன் அறிவித்தார். விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரவி மோகன், கெனிஷாவுடன் அண்மையில் திருமண விழாவில், ஜோடியாக கலந்துகொண்டார்.
பின்னர், ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ரவி மோகன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ரவி மோகனும் நீண்ட அறிக்கையை வெளியிட்டார். இருதரப்புக்கும் இடையே அறிக்கை போர் நடந்து வரும் சூழலில், கெனிஷா தற்போது இன்ஸ்டாவில்,
‘இந்த சத்தங்களுக்கு நடுவே அமைதியான நம்பிக்கை ஒன்று காத்திருக்கின்றது. என் ஆன்மாவின் கஷ்டம் தனியாக நிற்கின்றது. அதே வேளையில், அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கிறது.
தற்போதுள்ள சூழலில் நான் இசையை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறேன். காயங்களை எல்லாம் பாடங்களாக ஏற்றுக் கொள்கிறேன். நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கின்றது’ என தெரிவித்துள்ளார்.
