என்னை அப்படி அழைக்காதீர்கள்: ஏ.ஆர்.ரகுமான் ‘வைரல்’ பேச்சு..
‘என்னை அப்படி கூப்பிடவேண்டாம். பிடிக்கவில்லை’ என தெரிவித்துள்ளார் ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரகுமான். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ பாடல்கள் மே 24-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர்.ரகுமானை டிடி பேட்டி எடுத்துள்ள நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது டிடி பேசுகையில்,
‘பெரிய பாய் பாட்டுக்கு யார் நோ சொல்வார்கள்’ என குறிப்பிட்டார். அதற்கு ஏ.ஆர்.ரகுமான் ‘பெரிய பாயா?’ என்று சிரித்தார். உடனே டிடி ‘உங்களுக்கு தெரியாதா.. சமூக வலைதளத்தில் உங்களுடைய பெயரே அதான்’ என்றார்.
அதற்கு ஏ.ஆர்.ரகுமான் ‘வேணாம். எனக்குப் பிடிக்கலை. பெரிய பாய், சின்ன பாய்னு’ என்று பதில் அளித்துள்ளார்.
‘அப்போ வேணாம் கட்’ பண்ணிடலாம் என டிடி கூற, ரகுமான், ‘கட் பண்றதா நான் என்ன கசாப்புக் கடையாக வைச்சிருக்கேன்’ என ஜாலியாக பேசினார்.
