Pushpa 2

தளபதி விஜய்யின் கடைசிப் படம் டைட்டில் அறிவிப்பு.. அப்டேட்: ரசிகர்கள் செம குஷி..

தளபதி விஜய்யின் கடைசிப் படம் தளபதி- 69. இப்படத்தை எச். வினோத் தற்போது இயக்கிக் கொண்டிருக்க, கே.வி.என். புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து, அஜித்துடன் இணைந்து பணியாற்றி வந்த எச். வினோத் தற்போது முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். இதனால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. மேலும், தளபதியின் இறுதிப்படம் என்ற அறிவிப்பினாலும் மாஸ் கூடியிருக்கிறது.

இந்நிலையில் ‘தளபதி 69’ குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டைட்டில் அறிவிப்பை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் டிசம்பர் 31-ம் தேதி இரவில் ‘தளபதி 69’ படத்தின் டைட்டிலை அறிவிக்க இருப்பதாக வலைப்பேச்சு வீடியோவில் தெரிவித்துள்ளனர். இதனால், விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு குஷியுடன் புத்தாண்டை வரவேற்க காத்திருக்கின்றனர்.

‘தளபதி 69’-ல் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், இயக்குனர் கெளதம் மேனன், நரேன், பிரியாமணி மற்றும் ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

அரசியலைப் பற்றி பேரெழுச்சியாய் இப்படம் முழங்கும் எனவும், ஊழல்வாதிகளின் முகமூடியை கிழித்தெறிந்து மக்கள் நலன் காக்கப் போராடும் கதைக்களம் எனவும் கூறப்படுகிறது.

படத்திற்கு டைட்டிலாக, விஜய்காந்துக்கு ‘கேப்டன்’ போல, தளபதி விஜய்க்கு ‘பட்டம்’ கொடுக்கும் வகையிலோ; அல்லது ஜனநாயகம் சார்ந்த வகையிலோ அமையும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. பார்க்கலாம்.!

vijay last film thalapathy 69 title announcement update
vijay last film thalapathy 69 title announcement update