Pushpa 2

‘அமரன்’ பட விவகாரம்: கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் கேட்ட மன்னிப்பு..

அனைவரின் பாராட்டையும் பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது ‘அமரன்’ திரைப்படம். தற்போது, இப்படத்தினால் நேர்ந்த பிரச்சினை தொடர்பாக, ராஜ் கமல் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், இந்து ரெபெக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் வாழ்ந்திருந்தனர்.

கமல்ஹாசன் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். தியேட்டரில் படம் மாஸ் ரெஸ்பான்ஸை பெற்றது. குறிப்பாக, ரூபாய் 350 கோடி வரை வசூல் செய்தது. இதனால் கோலிவுட்டின் மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக மாறியிருக்கிறார் ஆதலால், தற்போது அடுத்த படங்களுக்கு சம்பளத்தையும் உயர்த்தியிருக்கிறார் என கூறப்படுகிறது.

இச்சூழ்நிலையில், அமரன் திரைப்படம் நேற்று முதல் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாகிறது. திரையரங்கில் எப்படி சூப்பர் வரவேற்பை படம் பெற்றதோ, அதேபோல் ஓடிடியிலும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது.

இதற்கிடையே, படத்தின் ஒரு காட்சியால் பிரச்சினை ஒன்று வெடித்தது. அதாவது, படத்தில் சாய் பல்லவி தன்னுடைய தொலைபேசி எண் என்று சொல்லி ஒரு எண்ணை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார். அந்த எண் வாகீசன் என்ற இளைஞருடையது.

அந்த எண் படத்தில் இடம் பெற்றதைத் தொடர்ந்து, அது தான் சாய் பல்லவியின் எண் என்று நினைத்து அவ்வளவு அழைப்புகள் அந்த எண்ணுக்கு சென்றன. இதனால், பெரும் இம்சைக்கு ஆளான வாகீசன், ‘1.1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருந்தார்.

இந்த விஷயமும் கவனம் பெற்றது. மேலும், பட தயாரிப்பு நிறுவனம் வாகீசன் கேட்ட தொகையை கொடுக்குமா? எப்படி இந்தப் பிரச்சினையை சமாளிக்கப் போகிறது என எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

இந்நிலையில், வாகீசனிடம் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் அவரது எண்ணை பயன்படுத்தியதற்காக, மன்னிப்பு கேட்டுவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

எதார்த்தமாக நிகழும் சில காட்சிகளால், யார் யாருக்கோ எப்படியெல்லாமோ விளம்பரம் ஏற்பட்டு விடுகிறது; அல்லது மெனக்கெட்டு தேடிக் கொள்கிறார்கள் போலும்.!

rajkamal productions has apologized to vageesan for the film amaran
rajkamal productions has apologized to vageesan for the film amaran