அமரன் : ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Web Ads

அமரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

amaran movie overall collection update
amaran movie overall collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் கொடுத்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படம் வசூலிலும் மிரட்டி வருகிறது என்றே சொல்லலாம். தற்போது இறுதியாக உலக அளவில் இந்த திரைப்படம் 339 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

amaran movie overall collection update
amaran movie overall collection update