‘ரணபாலி’ படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண வரவேற்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கார்த்தியின் புகைப்படம் வைரலாகி விட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி சட்டை, துண்டு அணிந்திருந்தார் விஜய் தேவரகொண்டா. ரஷ்மிகா சிவப்பு நிற பட்டுச்சேலை அணிந்திருந்தார். கார்த்தி கோட், சூட்டில் வந்திருந்தார்.
இந்நிலையில், ராஷ்மிகா அருகில் நின்று கார்த்தி போஸ் கொடுக்க அதை பார்த்த ரசிகர்கள், விஜய் தேவரகொண்டா அல்ல கார்த்தி தான் மாப்பிள்ளை மாதிரி கெத்தாக இருக்கிறார் என கமென்ட் அடித்தார்கள். அதை பார்த்து கார்த்தியே சிரித்தாலும் சிரித்திருப்பார்.
திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி முடிந்துவிட்டது. இதையடுத்து விஜய்யும், ராஷ்மிகாவும் ஏதாவது வெளிநாட்டிற்கு கிளம்புவார்கள். ஒரு மாதம் வரை அவர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்பட்டது. ஆனால், தங்களை நம்பி படம் எடுப்பவர்களுக்காக மார்ச் 12-ந்தேதி ‘ரணபாலி’ படப்பிடிப்பில் இணைகின்றனர்.
திருமணத்திற்காக 14 நாட்கள் மட்டும் ஷூட்டிங் செல்லாமல் மீண்டும் கேமராவுக்கு முன்பு போய் நிற்கப் போகும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் கடமை உணர்ச்சியை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது எனவும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
தன் காதலி ராஷ்மிகாவை திருமணம் செய்து கொண்டதை மக்களுக்கு நல்ல காரியங்கள் செய்து கொண்டாடும் விஜய் தேவரகொண்டாவை பலரும் பாராட்டுகிறார்கள். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்களுக்கு இனிப்புகள் கொடுத்தார்கள். மேலும் கோவில்களில் அன்னதானம் நடந்தது. மேலும் 44 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

