நான் ஏன் பாடலை நீக்க வேண்டும்.. எனக்கு உரிமை இருக்கு.. இளையராஜா பற்றி ஆவேசமாக பேசிய வனிதா.!!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார் இவரது மகள் வனிதா விஜயகுமார் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது அதற்கு வனிதாவும் நான் இளையராஜாவை வீட்டில் சந்தித்து பேசி அனுமதி வாங்கி தான் பயன்படுத்தியிருந்தேன் என்றும் சொல்லியிருந்தார். இது மட்டுமில்லாமல் நான் அந்த வீட்டுக்கு மருமகளா சென்று இருக்க வேண்டியவள் என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு வந்தபோது செய்தியாளர்களிடம் கோபமாக பேசியுள்ளார். நான் வரும்போது கேபில் வந்தேன் ஆனா அந்த டிரைவர் என்னை பார்த்து இளையராஜாவுக்கு வேற வேலையே இல்லையா என்று கேட்கிறார் இவர் செய்வது எல்லாம் வெளியில் இப்படித்தான் பேசப்படுகிறது நான் கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுக்கிறேன் அது மட்டும் இல்லாமல் பணம் கொடுத்து ரைட்ஸ் வாங்கித் தான் நான் பாடலை பயன்படுத்தி இருக்கிறேன் நான் ஏன் நீக்க வேண்டும் எனக்கு உரிமை இருக்கிறது என்று கோபமாக பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
