Web Ad 2

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் ரிலீஸ் ஒத்திவைப்பு..

கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் உருவாவதாக இருந்த ‘கைதி-2’ படம் மேலும் தாமதமாகி உள்ளது. இது குறித்து இயக்குநர் லோகேஷ், கார்த்தி இருவரும் தெளிவான தகவல் தரவில்லை.

இந்நிலையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ படம் வருகிற 12-ந்தேதி திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன், ‘எங்களை மீறிய சில எதிர்பாராத சூழ்நிலையால் ‘வா வாத்தியார்’ திட்டமிட்ட தேதியில் வெளியாகாது. இது மிகவும் கடினமான முடிவு, குறிப்பாக அனைவரும் ஆர்வத்துடன் படத்துக்காக எவ்வளவு காத்திருந்தீர்கள் என்பதை அறிகிறோம்.

இந்த ஏமாற்றத்துக்காக ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த நிலையை விரைவில் சரி செய்ய நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். விரைவில் புதிய வெளியீட்டு தேதியை பகிர்ந்து கொள்கிறோம்.

உங்கள் அன்பு, பொறுமை மற்றும் அசைக்க முடியாத ஆதரவு எங்களுக்குத் தேவை. இந்த காத்திருப்புக்கு ‘வா வாத்தியார்’ தகுதியானதே’ என தெரிவித்துள்ளார்கள்.

ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்பட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டது.

இச்சூழலில், ‘வா வாத்தியார்’ படம் எப்போது ரிலீஸாகும் என்பதை தயாரிப்பு நிறுவனம் கோர்ட் வழக்கு விசாரணை முடிவுற்ற பிறகு, அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், ரசிகர்களுக்காக விரைந்து வருவார் வாத்தியார்.!

vaa vaathiyaar release postponed production company apologizes
vaa vaathiyaar release postponed production company apologizes